ரூ.5 கோடி பெறுமதியான வடிவேலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டுப்பரமக்குடி கிராமத்தில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும்.

இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சேத்தூர் கிராமத்தில் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் கிராம கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து, அவர்களது முன்னிலையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது.

மேலும் அந்த இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
தீயாக பரவும் எருமசாணி மிருளாணி
Read More

தீயாக பரவும் எருமசாணி மிருளாணி இடுப்பை காட்டிய புகைப்படம்

மிருளாணி, யூடியூபில் எருமசாணி என்ற பக்கத்தில் வெளியான வீடியோக்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குழந்தை பெற்றெடுத்த போதிலும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக…
Read More

ரம்யா கிருஷ்ணன் அணிந்து வந்த உடையால் அசந்துபோன ரசிகர்கள் !

நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது கணவர், குழந்தை என செட்டிலாகிவிட்டார்.ஆனாலும் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் இவரின் ராஜமாதா கதாபாத்திரம்…