சந்திரமுகி 2ஆம் பாகத்தில் நடிகை அனுஷ்கா? வெளியான தகவல்

2005ல் திரைக்கு வந்த ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் பெரிய வெற்றி பெற்றது. பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார்.

மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின்…
அருண் விஜய்
Read More

படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் அருண் விஜய்

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக…