‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட நடிகையின் ரீ-எண்ட்ரீ

எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா. அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார்.

பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். அக்கா போலவே இவரும் தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக மாறினார்.

நீண்ட காலமாக நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்து இப்போது OTT மூலம் மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார். செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள்.

திரைத்துறையிலிருந்து விலகிய பிறகு தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார். 2012 க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் zee studios original நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
வேதாளம்
Read More

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்; என்ன கேரக்டர் தெரியுமா?

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் தல அஜித் நடிப்பில், கடந்த 2015ம் ஆண்டு உருவாகிய திரைப்படம் ’வேதாளம்’. இந்த நிலையில் இந்த…
மகேஷ்பாபுவின் புதிய படம்
Read More

மகேஷ்பாபுவின் புதிய படம் பிரம்மாண்ட சாதனை

மகேஷ்பாபுவின் புதிய படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சரிலேரு நீக்கவ்வரு.…