நட்பு பாடலை நண்பர்கள் தினத்தன்று வெளியிட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’படக்குழு

natpu music video tamil

நட்பு பாடலை நண்பர்கள் தினத்தன்று ‘ஆர்.ஆர்.ஆர்’படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. கீரவாணி இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘நட்பு’ என்ற பாடல் நண்பர்கள் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இப்பாடலை தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடியுள்ளனர்.

‘நட்பு’ பாடல் வீடியோவில், பிரம்மாண்ட அரங்கில் அனிருத் பாடுவது போன்றும், பின்னணியில் நடனக் கலைஞர்கள் ஆடுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

வீடியோவின் இறுதியில், ‘ஆர்.ஆர்.ஆர்’ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து ‘நட்பு’ பாடலை மேலும் சிறப்பித்துள்ளனர்.

 

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

யோகிபாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் ஓவியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து…
Read More

மோகன் ராஜா இயக்கும் மெகா ஸ்டார் படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்

இயக்குனர் மோகன் ராஜா, தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி & அரவிந்த்சாமி இணைந்து…