நடிகர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த பிரகாஷ் ராஜ்

தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார். பிரகாஷ் ராஜூக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ்ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.

மொத்தம் உள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. இதில் 655 ஓட்டுக்கள் பதிவானது. விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார்.

இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ். ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

ரஜினியுடன் மோத விரும்பாத அஜித்; வியப்பில் ரசிகர்கள்.!

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. வலிமை திரைப்படம் அடுத்த 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என…
Read More

விஜய் சேதுபதியின் வெப்சீரிஸ் படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து…