“அண்ணாத்த” அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே, எப்போ? மாஸ் அப்டேட்!

"அண்ணாத்த" அடுத்த கட்ட படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடிப்பில் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்துவந்தது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டது.

கடந்த வாரம், இயக்குனர் பிரியதர்ஷனின் Four Frames Sound கம்பெனியில் ‘அண்ணாத்த’ படத்துக்காக டப்பிங் பேசும் பணிகளை ரஜினிகாந்த் தொடங்கியிருந்தார். இந்நிலையில் புதிய அப்டேட்டாக அண்ணாத்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் லக்னோ மற்றும் கல்கத்தா பகுதிகளில் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்புகள் இம்மாதம் 19-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் போர்ஷன் இல்லாததால், அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் 2021 தீபாவளிக்கு வெளியாகும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

"அண்ணாத்த" அடுத்த கட்ட படப்பிடிப்பு

10 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

மாநாடு பற்றி வெளியான செய்தியால் கடுப்பான வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை…
Read More

யோகிபாபுவுக்கு ஜோடியான பிக்பாஸ் ஓவியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல படங்களில் பிசியாக நடித்து…