விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை

விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர்.

இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார்.

அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
தளபதி 66 இயக்குநர் யார் தெரியுமா
Read More

தளபதி 66 இயக்குநர் யார் தெரியுமா? தளபதிக்கு சம்பளம் இவ்வளவா!

தளபதி 66 இயக்குநர் யார் தெரியுமா? தளபதிக்கு சம்பளம் இவ்வளவா! முன்னணி நடிகராக வலம் வருமு் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம்…
விவேக்கின் இறுதி காமெடி நிகழ்ச்சி
Read More

விவேக்கின் இறுதி காமெடி நிகழ்ச்சி.. வீடியோவை வெளியிட்ட சூர்யா

விவேக்கின் இறுதி காமெடி நிகழ்ச்சி வீடியோவை வெளியிட்ட சூர்யா மனதை உருக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சந்தோஷ வெள்ளத்தில்…