நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்க திட்டம்

நயன்தாரா

நயன்தாரா நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

திரில்லர் வகையில் எடுக்கப்படும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எம்ஜிஆர் பிலிம் இன்ஸ்டியூட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக நயன்தாரா 40 நாட்கள் ஒதுக்கியுள்ளார்.

சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கோவையில் சில நாட்கள் இதற்கான படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

இந்த படத்திற்கு தமிழ் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல் சார்பட்டா பரம்பரை படத்தின் எடிட்டர் செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்கிறார்.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
Read More

சங்கர் படத்துக்கு மீண்டும் எழுந்துள்ள சிக்கல் ரசிகர்கள் அதிர்ச்சி

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005ல் வெளியான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்…
Read More

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட நடிகையின் ரீ-எண்ட்ரீ

எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா. அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின்…