அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’

சுகுமார் இயக்கும் ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, தற்போது முதல் பாகத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

அதன்படி புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
பிரபல நடிகர் காலமானார்
Read More

பிரபல நடிகர் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற்று மற்றும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். பாடகர் எஸ்பிபி, இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், கே.வி.ஆனந்த்,…
லாஸ்லியாவின் முதல் படம்
Read More

லாஸ்லியாவின் முதல் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

பிக்பாஸ் லாஸ்லியா நடித்த முதல் திரைப்படம் ஃபிரண்ட்ஷிப். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த…