வீட்டிலேயே கருக்கலைப்பு… விபரீதமாய் உயிரிழந்த இளம்பெண்..!

பிரசவத்திற்கு பயந்து கர்ப்பத்தைக் கலைக்க நாட்டு மருந்து உட்கொண்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா . ஒடிசாவைச் சேர்ந்த இவர்கள் இருவரும் இங்கு தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர்.

குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தநிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டதாக தகவல் வந்தது.

இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா- குமாரி கஞ்சக்கா தம்பதியினர் ஒடிசா சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கில் பங்கேற்ற குமாரியிடம் அவருடைய உறவினர்கள், கர்ப்பிணியின் இறப்பு குறித்தும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் பேசியுள்ளனர்.

இதுபோல தானும் குழந்தை பிறக்கும் போது இறந்து விடுவோமோ என்று அஞ்சிய குமாரி, தனது வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைக்க முடிவு செய்துள்ளார்.தனது கணவருக்குத் தெரிவிக்காமல் கருவைக் கலைப்பதற்கு தனது தோழியிடம் இதற்காக உதவி கேட்டுள்ளார்.

தோழியின் அறிவுரைப்படி அவருடைய சொந்த ஊரில் உள்ள ஒரு நபரிடம் சென்று கருக்கலைப்புக்கான நாட்டு மருத்தை வாங்கி உட்கொண்டுள்ளார். இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமலேயே இருந்து வந்துள்ளார்.
மருந்து சாப்பிட்டதில் இருந்தே குமாரிக்கு அவ்வப்போது உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத குமாரியின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துள்ளது.

திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலியுடன் சிறுநீரகப் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே தான் கருக்கலைப்புக்காக நாட்டுமருந்தை உட்கொண்டதாக குமாரி தனது கணவணிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து குமாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் வழக்கம்போல தங்கள் வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளனர்.

ஆனாலும் ஒருசில நாட்களிலேயே குமாரியின் உடல்நிலை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக கூறி உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குமாரியின் சகோதரி அளித்த புகாரின்பேரில் கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் உள்காவிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் கர்ப்பிணியான குமாரி கருகலைப்புக்கான நாட்டுமருந்தை வாங்கி சாப்பிட்ட சில நாட்களிலேயே வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டதாகவும் ஆனால், இறந்த சிசு வெளியேறாமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயிற்றிலேயே தங்கிவிட்டதால் கர்ப்பபை ரணமாகி இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

1 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்
Read More

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. தெறிக்கவிடும் மாஸ் அப்டேட் இதோ!

நடிகர் விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகிக் கொண்டுள்ளது பீஸ்ட் திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேதமிழ் சினிமாவிற்கு மீண்டும்…
கூட்டத்தில் சிக்கிய நயன்தரா
Read More

கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா… என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு சம்பவம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும்…