ராய் லட்சுமியின் கையை பிடித்து இழுத்த பிரபல நடிகர்

ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் சிண்ட்ரெல்லா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் ரோபோ சங்கர் பேசும், ‘ராய் லட்சுமி பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கிறார். அவரை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேகமாக வந்து பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டேன்’ என்றார்.

பின்னர் ராய் லட்சுமி மைக்கில் பேசுவதற்காக எழுந்து செல்லும்போது, போகாதே என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டார். ராய் லட்சுமி பேசும்போது, சிண்ட்ரெல்லா ஒரு திகில் படம். இது வழக்கமான திகில் படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கும்.

காஞ்சனா மற்றும் அரண்மனை போன்ற எனது வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இந்த வகை திரைப்படங்களைத் தேர்வு செய்ய நான் தயங்கினேன். ஆனால் சிண்ட்ரெல்லா தலைப்பின் முக்கியத்துவத்தும் என்னை ஆச்சரியப்படுத்தியது.

சிண்ட்ரெல்லாவின் வெற்றி இயக்குனர் வினோவின் கடின உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. சிண்ட்ரெல்லா உடையில் நான் நடித்த காட்சி சவாலானது.

பல நேரங்களில், அது மிகவும் கடினமாக இருந்தது. இந்த கடினமான காட்சிகள் முடிந்தவுடன், நகைச்சுவை காட்சிகளில் ரோபோ சங்கருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.

8 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ்
Read More

பீஸ்ட் திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.. தெறிக்கவிடும் மாஸ் அப்டேட் இதோ!

நடிகர் விஜய்யின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகிக் கொண்டுள்ளது பீஸ்ட் திரைப்படம். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேதமிழ் சினிமாவிற்கு மீண்டும்…
கூட்டத்தில் சிக்கிய நயன்தரா
Read More

கூட்டத்தில் சிக்கிய நயன்தாரா… என்ன நடந்தது தெரியுமா? பரபரப்பு சம்பவம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும்…