விஜய் சேதுபதியின் வெப்சீரிஸ் படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தப்படம் உருவாகி வருகின்றது. மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

விஜய் சேதுபதியின் வெப்சீரிஸ் படப்பிடிப்பு ஆரம்பம்

இதேநேரம், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகும் மும்பைக்கார் திரைப்படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய பாலிவுட் வெப்சீரிஸின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. ஃபேமிலி மேன் வெப்சீரிஸின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதியோடு மூன்றாவது முறை இணைந்து பணியாற்ற உள்ளதாக நடிகை ராஷி கண்ணா தெரிவித்துள்ளார்.

0 Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like
விஸ்வரூபம் எடுக்கும் 'அந்நியன்' ரீமேக்
Read More

விஸ்வரூபம் எடுக்கும் ‘அந்நியன்’ ரீமேக் விவகாரம்… இயக்குனர் ஷங்கர் மீது புதிய வழக்கு

பிரபலமான இயக்குனர் சங்கருக்கு சமீபகாலமாக சிக்கல் மேல் சிக்கலாக ஏற்பட்டு வருகிறது. அண்மையில் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக சங்கர் அறிவிக்க, அதற்கு…
ஐஸ்வர்யா ராஜேஷ்
Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் மண்ணென்னும் மாயத் தீ பாடல்

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் மண்ணென்னும் மாயத் தீ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது. கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம்…